| |
போராளி வீரச்சாவு
|
14 மார்ச்2005 |
|
| |
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜெயசிக்குறு எதிர்ப்புச் சமரின்போது விழுப்புண் அடைந்து, சிகிச்சை பெற்று வந்த போராளி ஒருவர் 14.03.5005அன்று வீரச்சாவடைந்துள்ளார். சாமிப்புலம் நல்லூர் பூநகரி மன்னாரைச் சேர்ந்த மேஜர் நவக்குமார் என்றழைக்கப்படும் கதிரவேலு சந்திரமோகன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார். இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.
|
|
| |
ஆழிப்பேரலை காலத்தில் அள்ளிக்கொடுத்த புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு தேசியத் தலைவரின் நன்றி: நோர்வேயில் தமிழ்செல்வன் தகவல். |
16 மார்ச் 2005 |
|
| |
தமிழர் தாயகத்தை ஆழிப்பேரலை தாக்கி அழித்தபோது பாதிக்கப்பட்டட மக்களுக்காக உலகம் முழுமையிலும் நிதிகளையும் பொருட்களையும் வேகமாகத் திரட்டித் தாயகத்துக்கு அனுப்பிய புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளார். நோர்வே பேகன் நகரில் புலம்பெயர் தமிழ் மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய தமிழீழ அரசியல் துறைப் பொறுபர்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தேசியத் தலைவரின் நன்றித் தகவலை அறிவித்தார்.
|
|
| |
யேர்மனியில் விடுதலைப்புலிகளின் அரசியல் விவகாராக் குழுவினர் |
16 மார்ச் 2005 |
|
| |
தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தலைமையிலான அரசியல் விவகாரக்குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தில் சுவீடன் தலைநகர் ஸ்ரொக்கூமிலிருந்து 16.03.2005 அன்று காலை 9.05மணிக்கு யேர்மனியின் தலைநகர் பேர்லினுக்கு வருகை தந்திருந்தார். யேர்மனிக்கு வருகை தந்த இவர்கள் யேர்மனிய வெளிநாட்டமைச்சுடனான சந்திப்பிலும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடனான் சந்திப்பிலும் பங்கேற்றனர்.
|
|
| |
இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் தமிழன் இயல்பு வாழ்க்கை முடங்கி கிடக்கிறது சுவிஸ் சந்திப்பில் சு.ப.தமிழ்செல்வன் |
23 மார்ச் 2005 |
|
| |
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, சட்டம் என்பன விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ஓழுங்காகப் பேணப்படுகின்றது. ஆனால் தமிழீழத் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புப்பகுதியில் இது பிரச்சனைக்குரியதாக இருக்கின்றது என தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சுவிற்சலாந்தின் வெளிவிகாரத் தூதுவர் தோமஸ் கிறிஸ் மிங்கர் தலைமையிலான உயர்நிலையிலான உயர்நிலைக் குழுவுடனான சந்திப்பின்; போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆழிப்பேரலையில் பின்னான சமாதான முன்னெடுப்புக்கள், புனர்நிர்மான மீள்குடியமர்வு, அபிவிருத்திக்கான முன்மொழியப்பட்ட இணைந்த பொறிமுறையின் தற்போதைய நிலைமை குறித்து சந்திப்பின் போது சு.ப தமிழ்ச்செல்வன் விவரித்தார்.
|
|
| |
தமிழீழ அரசியல் விவகாரக்குழுவினருடன் ஓஸ்ரிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் சந்திப்பு.
|
|
|
| |
தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான அரசியல் விவகாரக்குழுவினருக்கும் ஓஸ்ரியாவின் வெளிவிவகாரகங்ளுக்கான சமஸ்டி அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 24.03.2005அன்று நடைபெற்றுள்ளது. ஓஸ்ரியா வெளிவிவகார அமைச்சின் கட்டத் தொகுதியில் நடைபெற்ற இச்சந்திப்பில் அந்நாட்டின் மனிதாபிமான உதவிகளுக்கான அமைப்பின் தலைவர் பிரான்ஸ் ஹோர்ல் பேர்க்கர் உட்பட முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
|
|
| |
ஆழிப்பேரலையால் உருவான சூழ்நிலையை சமாதானத்துக்குச் சாதகமாக பயன்படுத்தாத கொழும்பு ஓஸ்ரியோவில் தமிழ்செல்வன்.
|
|
|
| |
ஆழிப்பேரலை உருவாக்கிய சந்தர்ப்பத்தைச் சமாதான முன்னெடுப்புகளுக்குச் சாதகமாக சீறிலங்கா அரசு பயன்படுத்தவில்லை என்று ஒஸ்ரியோவில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். வியன்னா அமைச்சரவை வளாகத்தில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர், ஒஸ்ரிய வெளிநாட்டலுவல்களிற்கான சமஷ்டி அமைச்சக மனிதநேய உதவிகள் திணைக்களத் தலைவர் தலைமையிலான குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
|
|