எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே

மனோன்மணி சண்முகதாஸ்

பண்டைத்தமிழி இலக்கிய பதிவுகள் காலத்தைக், கடந்து நிற்பவை. செந்நாப்புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு இன்று எம் கையில் கிடைத்துள்ளது. அவற்றுள் “புறநானூறு” என்னும் 400 பாடல்களின் தொகுப்பு பண்டைத் தமிழரின் புறவாழ்வியல் பற்றிய செய்திகளை உள்ளக்கியது. வாய் மொழியாக வழங்கிவந்த பாடல்கள் ‘புறநானூறு’ என்ற தொகுப்பாக அமைக்கப்பட்ட போது கடவுள் வாழ்த்துப் பாடலும் 400 எனும் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. நூல் தொகுப்பு யாரால், யார் கேட்டதற்கு இணங்கத் தொகுக்கப்பட்டது என்ற விளக்கமும் இல்லை. எனவே வரலாறு பதிவு செய்யப்பட்டபோது உண்மையான செய்திகள் மறைக்கப்பட்ட நிலையையும் நாம் உணர முடிகிறது.

எனினும் புறநானூற்றுப் பாடல்கள் கூறும் செய்திகள் பண்டைய தமிழரின் புறவாழ்வியலைக் காட்சிப்படுத்திக் காட்டும் சிறந்த கவிதைகள். இன்றைய கவிஞர்களின் முன்னோடிகளான சங்கப்புலவரின் புலமைத்திறனுக்குச் சான்றாக நின்று நிலைத்திருக்கும் செய்யுள்கள். அவற்றைப் படிக்கும்போது எமது இலக்கிய வழியின் தடத்தை அறியலாம். இப்போதைய கவிஞர்களின் கவிதைக்குப் பாடுபொருளாக அமைய வேண்டியது என்ன என வழிகாட்டும் திசைகாட்டியாகவும் புறநானூற்றுப் பாடல்கள் தோன்றுவதை, பாடல்களை ஆழமாகக் கருத்தூன்றிக் கற்போர் உணர்ந்துகொள்வர். செந்தமிழ் நடையில் சிறந்த கருத்துக்கள் பாடல்களிலே விரவிக்கிடக்கின்றன. துமிழ்மொழியின் கவிதைப் பண்பு நலனையும் ஊடகத் தொடர்பான ஆற்றல் நிலையையும் வெளிக்கொணர ஒரு மீள் கற்கைநெறியும் இன்று இன்றியமையாதது.

அத்தகைய கற்கைநெறியிலே செல்லும் முயற்சியில் இக்கட்டுரை சில பாடல்களை வகைமாதிரியாக எடுத்துக்காட்ட முனைகிறது. குறிப்பாகப் பெண்பாற் புலவர்களின் புலமைத்திறணையும் வாழ்க்கை நோக்கையும் வெளிப்படுத்தும் தமிழர் வாழ்வியல் மரபில் பெண்மையின் பங்கை எப்படி இணைக்கலாம் என்று எண்ணியிருப் போருக்கு ஒரு கைவிளக்காகவும் இது பயன்படும்.

புறநானூற்றுத் தொகுப்பிலே பாடல்கள் பாடிய புலவர்கள் பலராவர். பல்வேறு தொழில் செய்வோரும் பல்வேறிடங்களில் வாழ்ந்தவரும் எனப் புலவர்கள் நாடெங்கும் பரந்து வாழ்ந்ததை இது காட்டுகிறது. இவர்களில் ஓளவையார் என்னும் பெண்பாற் புலவர் பாடிய பாடல் பெண்மைபற்றிய குணநலன் ஒன்றைத் தனித்துவமாகக் காட்டுகிறது. பேண் ஒருத்திக்கு இவ்வளவு நெஞ்சுரம் இருந்ததா என வியக்கவைக்கும் இடம் “பெண்ணென்று பூமி தனில் பிறந்துவிட்டால் பெரும் பீழை இருக்குதடி” என்று இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் பாரதி பாடினான். பாரதிக்குப் புறநானூற்றுப் பாடல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே ஓளவையின் புலமை வீரம் தெரியவில்லை.

ஓளவையின் பாடல்கள் அவருடைய தமிழ்மொழிப் புலமையையும் யாருக்கும் அஞ்சாத வீர உணர்வையும் வெளிப்படுத்தும். மன்னன் அவையிலே சென்று நெல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பாராட்டும் பரிசும் பெறும் புலவர் வழ்க்கையிலே ஆண், பெண் என்ற வேறுபாடு அந்நாளில் இருக்கவில்லை.மன்னனுடன் நட்புடையராக இருந்த புலவர்களில் ஓளவையாரும் ஒருவர். ‘ஓளவை’ என்ற பெயரில் பலர் இருந்தாகவும் கருதப்படுகிறது. ஆனால் ‘அதியமான் நெடுமானஞ்சி’ எனும் மன்னனிடம் பாடிப்பரிசில் பெறச் சென்ற ஒளவையார் பற்றிய செய்தி அவருடைய பாடல் மூலம் பெறப்பட்டது. புலiமையின் செருக்கும் பெண்மையெனப் பணிந்து போகாத பண்புநலனையும் அப்பாடல் பதிவு செய்துள்ளது. மன்னனைப் பற்றித் துணிவோடு எடுத்துரைக்கும் ஆற்றலும் மனவுரமும் கல்விப் புலமையால் அக் காலத்துப் பெண்மை பெற்றிருந்ததையே அப்பாடல் சான்ற காட்டி நிற்கிறது. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு என்ற கருத்தை முதலில் வலியுறுத்திக் காட்டியவர் ஓளவையார் எனலாம். மோழி ஆற்றலால் வாழ்க்கைக்குத் தேவையானதைப் பெறமுடியும். வயிற்றுப்பசிக்கு வேண்டிய சோறு திக்கெங்கும் உண்டு. உன் மன்னனை மட்டும் நான் நம்பியிருக்கவில்லை என்று நிறு திட்டமாகக் கூறும் அவருடைய நெஞ்சுரம் புலமை ஆற்றலால் பெற்ற பெருவீரம் என்றால் மிகையாகாது. நாட்டை ஆளும் மன்னனையே துச்சமாகக் கருதித் தூக்கியெறிந்து பேசும் பெண்மையின் கற்புநெறிமைக்கும் வேண்டும்.. ஓளவையார் பாடிய பாடல் அவரத சான்iறாண்மையையும் காட்டி நிற்கிறது
“வாயிலோயே வாயிலோயே வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி தாம் முன்னியது முடிக்கும் முரணுடை உள்ளது.

வரிசைக்கு வந்தும் இப்பரிசில் வழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயிலோயே கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன் அறி யலன்கொல் என்னறி யலன் கொல்

அறிவும் புகழும் உடையோர் மாய்ந்ததென வறுந்தலை உலகமும் அன்றே அதனால் காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை மரகொல் தச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அன்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”

(புறநானூறு:206)

மன்னன் அவையிலே சென்று தமிழால் பாடி அதற்கான பரிசினையும் பெறலாம் என்ற நோக்கோடு அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை சென்றார் ஓளவையார். அரண்மனையின் அடையாத வாயிலிNலு சென்று தான் வந்திருக்கும் செய்தியை மன்னனுக்கு வாயில் காப்போன் மூலம் அறிவித்துவிட்டு நீண்ட நேரமாகக் காத்துநின்றார். வுhயில் காவலன் செய்தியை மன்னனுக்கு அனுப்பிவிட்டுத் தன்கடமையில் நிற்கிறான். நேரம் கடந்துகொண்டிருந்தது. புலவர் ஓளவையாருக்கு உள்ளே செல்வதற்கான மன்னன் அழைப்பு வரவில்லை. ஓளவையார் பெறுமையோடு காத்திருக்கிறார். ஆவர் உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றுகிறது. பெண் என்று கருதி மன்னன் காலம் தாழ்த்துகிறானோ? மரபான நடைமுறையை அவர் நினைவில் காண்கிறார். ஆனால் அடுத்த கணம் அந்த நினைப்பை உதறி எறிந்து விட்டுப் புலமையின் ஆற்றலைக் கவசமாக்கிப் பாடுகிறார்.

வாயிற்காவலனை விளித்து அவர் பாடிய முறமை அதனைத் தெளிவாக உணர்த்துகிறது. அவருடைய புலமை நெறிநின்று வீரமாக அவனை விளித்துக் கூறும் செய்திதான் முக்கியமானத. உன்னுடைய மன்னன் தன்னிலை அறியாதவன் போலும்! என்னுடைய தரத்தையும் அறியாதவனா? ஓளவையின் வினா கூரிய வாள்வீச்சாகச் சொல்வீச்சாக வந்து விழுகிறது.

‘இதுவரை பரிசிலர்க்கு அடையாத வாயிலைக் காத்து நிற்பவனே’ என வாயிற்காப்போனை அவன் செய்யும் உன்னதமான பணியை நினைவூட்டுகிறார். இந்த அரண்மனை வாயிலின் சிறப்புத் தனித்தவமானது. தமிழின் சிறப்பையும் வளத்தையும் வரம்பிலா ஆற்றலையும் எங்கும் பரப்பும் புலமையாளரை வரவேற்கும் அடையாத வாயில் என்ற பெருமையை உன் மன்னன் மறந்துவிட்டான். தமிழ்ப புலமையாளர் வாழ்வை வளப்படுத்துவதற்காகப் பரிசில் வழங்கும் மன்னன் தன்னிலை உணரவேண்டும். எமது மொழியென்னும் ஊடகத்தினூடாக அவன் நிலை எங்கும் பரப்பப்படுகிறது என்பதை அவன் உணரவில்லை. அவன் வாழ்வும், வரலாறும் எமது பாடல்களில் பேசப்பட்டு எல்லோரும் அறியும்வண்ணம் நாம் செய்யும் செம்மையான பணியை அவன் மதிக்காவிட்டால் நாம் கவலை கொள்ளமாட்டோம். அறிவும் புகழும் உடையோர் இல்லாத வறிய இடத்தில் நாம் வாழவிரும்பவில்லை. எனவே இசைக் கருவியான படைக்கலங்களைப் பையிலே கட்டி எடுத்துக்கொண்டு செல்கிறோம். ஓளவையாரின் கூற்று மன்னனின் குணநலக் குறைவைப் பாடலிலே மறைமுகமாகப் பதிவு செய்துவிட்டது.

புலமையின் ஆற்றலை விளக்க ஓளவையார் எடுத்துகாட்டிய உவமை இங்கு மனங்கொள்ளக்தக்கது. மரத்தைத் துணித்து தொழில் செய்யும் தச்சன் கைவல்லமையுடையவனாக இருந்தால் காட்டிற்குச் சென்றால் அந்தக் காட்டை அவன் தொழிலின் திறமையை வெளிப்படுத்துவான். அதேபோன்று மொழிப்புலமையோர் எங்கே சென்றாலும் அப்புலமையால் நலம் தரும் பணியைச்செய்வார். கல்வியாளருக்கு எத்திசையிலே சென்றாலும் சோறுகிடைக்கும் என்று ஓளவை கூறுவது வெறும் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்காக மட்டும் நாம் மன்னரைப் பாடவில்லை. மன்னர் குறையை நாடறியச் செய்யவும் பாடுகிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.

பெண்மைக்கக் கல்வி கவசாமாக இணைந்து இருந்தால் அதன் வீரம் எப்படியிருக்கும் என்பதைப் புறநானூறு காட்டுகிறது. தன்னுடைய புலமையால் யார்க்கும் அஞ்சாமல் உள்ளதை உள்ளவாறு எடுத்துரைக்கும் நேர்மை நாம் அறிய வேண்டியது. அதே வேளையில் பண்டைத்தமிழர் மரபில் பெண்ணின் மென்மை மட்டும் பேசப்படவில்லை. அதன் திண்மையும் பேசப்பட்டுள்ளது. அந்த மரபு மீண்டும் இன்று துளிர்பதை எமது பெண் போராளிகள் கவிதையில் காணும் போது பெண்மையின் பேராற்றல் என்பது ஒரு வற்றாத வளநதியாக உலகை வலம்வருவது உணர்த்தப்படுகிறது.

எமது மண்ணில் களத்துப் போராடிய வீராங்களைகளின் உள்ளத்து உரம் எனும் போராயுதம் ஒளவையின் பாடல்வழி வந்த ஊற்று என்பதில் ஐயமில்லை. புதிய புறநானூறு தொகுக்கும் வரலாற்றுப் பாதையில் தமிழ்மொழி தரித்துநிற்கும் இந்த வேளையில் புலமையாற்றில்மிகுந்த பெண்போராளிக் கவிஞர்களின் ‘புதிய புறநானூறு’ தொகுக்கப்படும் பணி விரைவில் நடைபெறவேண்டும். éவொன்று புயலாகியதை ஒளவையின் பாடல் காட்சிப்படுத்தியுள்ளது. அவருடைய கல்வில் செருக்கையே பாரதி ‘திமிர்ந்த ஞானச்செருக்கு’ என்றான். இருபத்தியோராம் நூற்றாண்டு தகவல் தொழில்நுட்ப ஆண்டாகி உலகை வலம்வரும் வேளையில் தமிழ்மொழிப் புலமை தந்த பதிவுகளை மீள் பதிவுசெய்து எமது வரலாற்றுச் செல்நெறியைச் சீர்செய்ய வேண்டியுள்ளது. அதற்கான பெண்மையின் பங்களிப்பு புதியதொரு உதவும்கரம் என்பதில் ஐயமில்லை. போர் வெற்றி படைத்த பெண் எழுத்திலும் வெற்றிதரக் கத்திருக்கிறாள்.