பிந்துனுவெ படுகொலையின் ஒரு பார்வை.
-மு.பொ-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் தலைவர் எம் எக்ஸ் கருணாரட்டனம் அடிகளார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் . அதில் பிந்துனு வௌவில் சிறிலங்கா அரசால் அமைக்கப்பட்ட புனர்வாழ்வு நிலயத்தில் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். 7ஆண்டுகளாக இம் முகாம் இயங்கி வந்தது. இக்கிராம மக்களுக்கும் கைதிகளும் இடையே நல்லுறவே நீடித்து வந்தது.
இச்சூழலில் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி இருப்பத்தி நான்கு மணிநேரத்தில் தூண்டிவிடப்பட்ட பகமை உணர்வு காரணமாக இக் கிராம மக்களோடு சேர்ந்து ஒரு காடடையர் கும்பல் இம் முகாமைத் தீயிட்டுக் கொழுத்தியதோடு அங்கிருந்த கைதிகளில் 26பேரை கொடூரமாகக் கொலை செய்து 14பேரை படுகாயங்களுக்குட்படுத்தினர்.
இத் தாக்குதல் நடந்தேறிய நேரம். இவ் நிலயத்தைச் சுற்றி 60ற்கு மேற்பட்ட காவற்துறையினர் இருந்தும் எவரும் இவர்களைப் பாதுகாக்க முன் வரவில்லை. அதன் பின்பும் இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து வந்த தமிழ் மக்களின் வலியுறுத்தல்களின் பின்னரே சிறிலங்கா ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தார்.
இக்குழு தமது சொந்த விசாரணைகளின் அடிப்படையிலே 19 சிறிலங்காப் பொலிசார் உட்பட 41பேரை குற்றவாளிகள் என அடையாளம் காட்டி 2000ம் ஆண்டு நவம்பர்மாதம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
இவ்விசாரணை முடிவடைந்து 2003ம் ஆண்டு 2காவற்துறை உறுப்பினர்கள உள்ளிட்ட 5பேரிற்கு மரணதண்டனை நிறைவேற்றி நீதிமன்றம் தீர்பளித்தது.மிகுதிப் பேரை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது. இவ் நாடகம் முடிந்த பின்பு அடுத்தகட்டமாக இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறயீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டதால். மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2005மே மாதம் 27ம் திகதி இவர்கள் குற்றவாளிகள் அல்ல எனத் தீர்பளித்து ஐவரையும் விடுதலை செய்தது. இதைவிட 1977ஆம் ஆண்டு சன்சொனி ஆணையம் 1996ஆம் ஆண்டு கிரிசாந்தி பாலியால்கொலை வழக்கு, 1996ஆம் ஆண்டு காணாமல் போன ஆயிரக் கணக்கானோர் செம்மணியில் புதைக்கப்பட்ட புதைகுழி விவகாரம் என்பன வற்றையும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
எனவே இப்படுகொலைகளை நாம் நோக்குகின்றபோத கடந்த “மே” 27ம் திகதி சிறிலங்கா நீதித்துறை மீண்டும் ஒருமுறை எல்லோர் முகத்திலும் விéதி ஊதி வேப்பிலை அடித்துள்ளது.
உலக நாடுகளினதும் பல மனித உரிமை அமைப்புக்களினுடனும் அழுத்தத்தினால் இவ் வழக்கை ஆராய்வதற்கு ஒரு ஆணைக்குழுவை நியமித்தது அதன் மூலம் 5பேரிற்கு மரணதண்டனை விதித்து நீதி தேவதையின் கீரிடத்தை தொட்டுவிட்ட நீதித்துறை மேன்முறையீடு என்ற போர்வையில் அதன் முலாங்களைச் சுரண்டி விட்டிருக்கின்றது.
ஏற்கனவே இவ்வழக்கு விசாரணையில் ஒரு பகுதியினர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். மிகுதிப் பேர் தற்போது விடுதலையாகினர். கால இழுத்தடிப்பின் மூலம் இப்படுகொலைகளை சாதாரண நிகழ்வுகளாக்கி சிறிலங்கா மேன்நீதி மன்றம் ஒரு பாகுபாடான திர்ப்பை அளித்துள்ளது. அப்படினால் இக் கொலையின் சூத்திரதாரிகள் யார்? கொலைகாரர்கள் யார்? வேற்றுகிரகத்தவர்களா?
இதற்கு முடிவு யார் கூறுவது? நீதிமன்றத்துக்கு இனி ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படுமா?
|